[X] Close

5 தோழிகளுக்கு விதவிதமாக பரிசு வழங்க திருடிய முதியவர் போலீஸில் சிக்கினார்


this-63-year-old-delhi-bachelor-took-to-robbery-to-meet-demands-of-5-girlfriends

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Jul, 2018 15:22 pm
  • அ+ அ-

63 வயதான பந்து சிங்குக்கு 5 பெண் தோழிகள். அத்தனை பெண் தோழிகளுக்கும் விதவிதமாக பரிசு வழங்குவதற்காகவே காஸ்ட்லியான பொருட்களைத் திருடியிருக்கிறார். அப்படித்தான் ஒருநாள் ஏதோ அழகான புதுவித பல்பு என நினைத்து கேமராவைத் திருட முயன்று போலீஸில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

பின்னர் போலீஸில் அவர் கூறிய தகவல்கள் அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

மத்திய டெல்லியில் ஆனந்த் பர்பாத் ஊரைச் சேர்ந்தவர் பந்தன் சிங். பட்டம் படித்திருக்கிறார். ஆனால் என்ன பயன்? செய்வதோ திருட்டு!

அதற்குக் காரணம் வேறு வைத்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காதலி இவருக்கு பண வசதி இல்லை என்று கூறி இவரைப் பிரிந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பந்து, பல பெண்களை தனக்குத் தோழியாக ஆக்கியுள்ளார். அவர்களை எல்லாம் தக்கவைத்துக் கொள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

அவர்களுக்கு பரிசு வழங்குவதற்காகவே திருடவும் ஆரம்பித்திருக்கிறார். இவருடைய 5 பெண் தோழிகளில் ஒருவருக்கு வயது 28. இப்படியாக தோழிகளை பரிசு மலையில் நனையவைத்த அவர் ஒருநாள் ஏதோ அழகான புதுவித பல்பு என நினைத்து கேமராவைத் திருட முயன்று போலீஸில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

இவரது கைதைத் தொடர்ந்து 20 திருட்டு வழக்குகளில் இவர் சம்மந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. சிங்கின் வீட்டிலிருந்து லேப்டாப்புகள், செல்பேசிகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close