[X] Close

டேட்டிங் ஆப் நட்பு கொலையில் முடிந்த விபரீதம்!


australian-teen-charged-with-murder-of-indian-she-met-through-dating-app

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 15:19 pm
  • அ+ அ-

முகநக நட்பது நட்பல்ல என்று அன்றே வள்ளுவர் சொல்லிவைத்தாலும் கூட சமூக வலைதளங்களில் வெறும் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு நட்பாகி பின் அது கூடா நட்பாகி அது கேடாய் முடியும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஜேமி லீ என்ற 18 வயது பெண்ணுக்கும் மவுலின் ரத்தோட் என்ற 25 வயது இந்திய மாணவருக்கும் இடையே டேட்டிங் ஆப் மூலம் நட்பு மலர்ந்திருக்கிறது.

மவுலின் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்கு அக்கவுன்டன்ஸி படிப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான ஜேமி லீயின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

அங்கிருந்து சில மணி நேரங்களில் காவல்துறை அவசர எண்ணுக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. போலீஸார் ஜேமியின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு மவுலின் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மவுலின் இறந்தார். மவுலின் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஜேமியின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், மாணவர் கொலையை மெல்போர்னில் உள்ள இந்திய தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த துர்சம்பவத்தைச் சுற்றியிருக்கும் அசாதாரண சூழலால் மவுலின் சடலத்தை உடனே இந்தியா அனுப்பமுடியாத சூழலில் இருப்பதாக குடும்பத்தினருக்கு தூதரகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close