[X] Close

மொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்: ஒரு நீதிபதியின் அறிவுரை


keep-mobile-phones-out-of-the-reach-of-children

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Jul, 2018 17:23 pm
  • அ+ அ-

பலாத்கார வழக்கு ஒன்றை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர், "இந்த கொடூர சம்பவத்துக்குக் காரணம் இலவசமாகக் கிடைக்கும் இணையம். உங்கள் குழந்தைகளிடமிருந்து செல்ஃபோன்களை விலக்கி வையுங்கள்" என்று அறிவுரை கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் சாஹஸ்பூரில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. 8 வயது சிறுமியை 5 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஐந்து பேருக்கும் வயது 9-ல் இருந்து 14 வரைதான் என்கிறது போலீஸ் ஆவணங்கள்.
கடந்த சனுக்கிழமை மாலை தங்கள் மகள் வழக்கத்துக்கு மாறாக அமைதியாகவும் வருத்தமாகவும் இருப்பதைப் பார்த்து அவரிடம் அவரது பெற்றோர்கள் விசாரித்திருக்கின்றனர்.

அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை கூறியிருக்கிறார். உடனே பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்த சிறார் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் 5 சிறுவர்களையும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

அந்த 5 சிறுவர்களும் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்ஃபோனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளனர். அதன் காரணமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியதோடு குழந்தைகளிடமிருந்து செல்ஃபோன்களை விலக்கி வைக்குமாறு கூறியிருக்கின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close