[X] Close

ஸ்மார்ட்ஃபோனுக்காக நண்பனைக் கொன்ற இளைஞர்


hyderabad-teen-kills-friend-for-his-smartphone

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Jul, 2018 10:27 am
  • அ+ அ-

ஸ்மார்ட்ஃபோனுக்காக தனது நண்பனை எரித்துக் கொன்ற 19 வயது இளைஞரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். இது குறித்து மல்காஜ்கிரி காவல் துணை ஆணையர் கூறும்போது, "இந்த கொலை தொடர்பாக பிரேம் சாகர் என்ற 19 வயது இளைஞரை கைது செய்திருக்கிறோம். விசாரணையில் இவர் உப்பால் பகுதியைச் சேர்ந்த பிரேம் என்ற சிறுவனை அதிபத்லா பகுதிக்கு அழைத்துச் சென்று கட்டையால் தலையில் தாக்கி பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று காலையில் பிரேம் வீட்டுக்கு வந்த பிரேம் சாகர் அவரை தனது மோட்டார் சைக்கிளில் நீண்ட ரைட் அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றிருக்கிறார். அதிபத்லாவுக்கு வந்தவுடன் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு பிரேமை ஒரு கட்டையால் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். பிரேம் மயங்கி விழுந்தவுடன் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார். இதில் சிறுவன் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்திருக்கிறார்.
கொலைக்கான காரணத்தை பிரேம் சாகரே ஒப்புதல் வாக்குமூலமாகக் கூறினார். சிறுவன் பிரேம் நல்லதொரு ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்திருக்கிறார். அந்த ஸ்மார்ட்ஃபோனை பிரேம் சாகர் தனக்குக் கேட்டிருக்கிறார்.

ஆனால், சிறுவன் தர மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம் சாகர் அந்த சிறுவனைக் கொன்றிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

பிரேம் சாகர் மீது சட்டப்பிரிவுகள் 302, 364, 201 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரேம் சாகர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close