[X] Close

திருமண வீட்டில் வெடி போட எதிர்ப்பு தெரிவித்தவர் அடித்துக் கொலை


man-beaten-to-death-at-assam-wedding-for-objecting-to-firecrackers

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jul, 2018 16:48 pm
  • அ+ அ-

திருமண வீட்டில் வெடி போட எதிர்ப்பு தெரிவித்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அசாமில் நடந்துள்ளது. அசாமில் நலபாரி மாவட்டத்தில் முகல்முவா காவல் சரகத்துக்கு உட்பட்ட குராதோல் பகுதியில் நேற்று திருமண நிகழ்வுக்கான கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

அப்போது திருமண வீட்டில் குழந்தை ஒன்று வெடி வைக்க அந்த வெடி அவ்வழியாகச் சென்ற அண்டை வீட்டுக்காரர் ஜதின் தாஸ் மீது பட்டுள்ளது. இதனால் ஜத்தின் தாஸ் குழந்தையின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையின் கன்னத்தில் அறைந்ததற்காக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஜத்தின் தாஸை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் 35 வயதான ஜத்தின் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இது குறித்து போலீஸ் எஸ்.பி.ல் சிலாதித்யா சேத்தியா கூறும்போது, "நேற்றிரவு 11.30 மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. திருமண வீட்டில் வெடி போட எதிர்ப்பு தெரிவித்ததில் எழுந்த தகராறு வன்முறையாகியுள்ளது. இதில் குழந்தை கடத்தல் வதந்தி ஏதுமில்லை. ஜத்தின் தாஸ் இறந்துவிட்டதால் அவரது உறவினர்கள் மணப்பெண் வீட்டுக்கு மணமகன் குடும்பத்தார் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் திருமணமும் நின்றது" என்றார்.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர், ஜத்தின் தாஸை தாக்கியவர்கள் மது போதையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close