[X] Close

க்ரைம் கார்னர்: டெல்லியில் 11 பேர் மரணம்; விலகாத மர்மம்


delhi-family-deaths-occult-ritual-may-have-gone-awry

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Jul, 2018 10:50 am
  • அ+ அ-

வடக்கு டெல்லியில் புராரி பகுதியில் சன்ட் நகர் என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மங்கள் பொதிந்து கிடக்கின்றன.

நடந்தது கொலையா? தற்கொலையா? என விளங்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அந்த வீடு விழாக் கோலமாகக் காட்சியளித்திருக்கிறது. அந்த வீட்டைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கின்றனர்.
நடந்த சம்பவத்தை நம்பவே முடியாமல் தவிக்கின்றனர் பிரியங்காவை நிச்சயம் செய்த மணமகன் வீட்டார். எம்.பி.ஏ., பட்டதாரியான பிரியங்கா நொய்டாவில் பணியாற்றி வந்திருக்கிறார்.

"பிரியங்காவின் குடும்பத்தினர் அன்பானவர்கள். அவர்களுக்கு இறை பக்தி அதிகம். எங்களுக்குத் தெரிந்து அவர்கள் குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை ஏதுமில்லை. திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தோம். இந்த சம்பவம் எங்களை உடைத்துவிட்டது" எனக் கதறுகின்றனர் மணமகன் வீட்டார்.

இறந்தவர்களின் விவரம்; உறவுமுறை:

நாராயண தேவி (77). இவருக்கு 5 பிள்ளைகள். இவர்களில் பாவனேஷ் (50), லலித் (45), பிரதீபா (57) ஆகியோர் இறந்தனர். பாவனேஷின் மனைவி சவிதா (48). அவர்கள் பிள்ளைகள் நிதி (25), மேனகா (22), துருவ் (15) ஆகியோரும் இறந்தனர். லலித்தின் மனைவி டீனா (42), அவர்களது மகன் சிவம் (15) ஆகியோரும் இறந்தனர். 
அக்கம்பக்கத்தினர் வருத்தம் பாவனேஷின் அண்டை வீட்டில் வசிக்கும் குல்தீப் சிங், "பாவனேஷ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இரவு 11 மணி வரை கடையைத் திறந்து வைத்திருப்பார். தெருவை எப்போதுமே கண்காணித்துக் கொண்டிருப்பார். யாராவது பெண் பிள்ளைகளைக் கிண்டல் செய்தால் உடனே தட்டிக் கேட்பார். அவரது குடும்பத்தினருக்கு இறை பக்தி அதிகம்" என்று கூறினார். அவரால் பாவனேஷ் குடும்பத்தினரின் திடீர் மரணத்தை நம்பவே முடியவில்லை.

மூடநம்பிக்கை காரணமா?
இறைபக்தி அதிகமிருந்தாலும் பாவனேஷின் குடும்பத்தினர் சில மூடப் பழக்கவழக்கங்களைக் கடைபிடித்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில குறிப்புகளில் முக்தி அடைவது குறித்து சில குறிப்புகளை அவர்கள் எடுத்து வைத்திருந்தனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் இப்படி இறந்தால் அவர்கள் முக்தியடைய முடியும் என எழுதி வைத்திருந்தனர். இதனால் ஏதாவது மூட நம்பிக்கையால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close