[X] Close

சிகாகோவில் பாலியல் தொழிலில் தெலுங்கு நடிகைகள்: ஸ்ரீரெட்டி சொன்னது உண்மைதானா?


tollywoods-flesh-trade-links

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 14:42 pm
  • அ+ அ-

-மர்ரி ராமு

டோலிவுட் திரையுலகை திகைக்கவைத்தது நடிகை ஸ்ரீரெட்டியின் பகிரங்கப் போராட்டமும் பேட்டியும். திடீரென ஒரு நாள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி தெலுங்குத் திரையுலகில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகமாக இருப்பதாகக் கூறினார்.

ஸ்ரீரெட்டியின் குரல் இப்போது ஒடுங்கிவிட்டது. ஆனால் அவர் சொன்ன பாலியல் துன்புறுத்தல் சிகாகோவில் அரங்கேறியிருக்கிறது. பாலியல் தொழிலுக்காக ஆந்திராவிலிருந்து அமெரிக்காவின் சிகாகோவுக்கு தெலுங்கு நடிகைகளை அழைத்துச் செல்வதாக ஆந்திர தம்பதியை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர். 

மேலோட்டமாக பார்த்தால் ஸ்ரீரெட்டி டோலிவுட் இண்டஸ்ட்ரியிலும் சொல்லும் புகாருக்கும் சிகாகோவில் நடைபெறும் பாலியல் தொழிலுக்கும் நேரடி சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒரே ஒரு புள்ளியில் இணைகின்றன. ஹைதராபாத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறது அத்தொழிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ டோலிவுட் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதே அந்தப் புள்ளி.

ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத், "இப்போதெல்லாம் வழக்கமான இடங்களில் இத்தகைய பாலியல் தொழில்கள் நடைபெறுவதில்லை. ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் புரோக்கர்கள் அவர்களை வாடிக்கையாளர்களிடம் அனுப்பிவைக்கின்றனர்" என்றார்.

இதேபாணியில் தான் சிகாகோவில் சிக்கியுள்ள மொடுகுமுடி கிஷானும் அவரது மனைவி சந்திரகலா பூர்னிமாவும் செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் உள்ள சில நடிகைகளை சிகாகோவுக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர் என்கிறது ஹைதராபாத் போலீஸ்.

துப்பு துலங்கியது எப்படி?
2017 நவம்பர் 20-ம் தேதி சிகாகோ விமான நிலையத்தில் தெலுங்கு நடிகை ஒருவர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ராஜூ என்ற நபர் அனுப்பிய பயண ஆவணங்களை வைத்து தான் அமெரிக்கா கிளம்பி வந்ததாக அப்பெண் கூறுகிறர். அவர் கொடுத்த இமெயில் முகவரியை வைத்து போலீஸார் சைபர் சோதனை நடத்தியபோது ஸ்ரீராஹ் சேனுபதி என்பவர் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதை போலீஸார் கண்டறிந்தனர்.

தெலுங்கு நடிகை கொடுத்த செல்ஃபோன் எண்ணை கிஷான் என்பவர் பயன்படுத்தியதை போலீஸார் கண்டறிந்தனர். இன்டர்நெட் ஐபி முகவரியை வைத்து கிஷானின் வீடு இலினாய்ஸ் நகரில் இருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். கிஷான் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் பின் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கும் பல டிக்கெட்டுகளை புக் செய்ததும் தெரியவந்தது.

2016 நவம்பரில் இருந்து 2018 ஜனவரி வரை கிஷான் 42 முறை ஓட்டல் அறை புக் செய்திருக்கிறார். வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ஓட்டல்களில் அறைகள் புக் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அத்தனையும் இந்தியர்கள் பெயரில் இருந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே கிஷான் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close