[X] Close

க்ரைம் கார்னர்: உயிரைப் பறித்த மோகம்; 6 மாதங்களில் 3500 ஃபோன் கால் செய்த ராணுவ மேஜர்


3-500-calls-in-6-months-between-army-major-woman-he-allegedly-killed

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jun, 2018 10:43 am
  • அ+ அ-

ராணுவ மேஜரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை குற்றம் சாட்டப்பட்ட ராணுவ மேஜர் கொலையான பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பவம் நடந்த நாள் வரை 3500 முறை ஃபோன் செய்தது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் ராணுவ மேஜர் மனைவி ஒருவர் மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அது ராணுவ மேஜர் அமித் திவிவேதியின் மனைவி என்பது தெரியவந்தது.

அமித் திவிவேதி டெல்லி திமாபூரில் பணி புரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சைலஜா மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் சைலஜா கடந்த சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் கொலை செய்தவரும் ஒரு ராணுவ அதிகாரி. நிகில் ஹண்டா என்ற அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. கொலை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் நிகில் ஹண்டே கடந்த ஜனவரி மாதம் முதல் கொலை நடந்த நாள்வரை 3500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார் நிகில் ஹண்டே. இத்தனை அதிகமான ஃபோன் கால்களை செய்திருப்பதன் மூலம் நிகில் சைலஜா மீது அதீத பற்று கொண்டிருந்ததாகத் தெரிவதாக வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி விஜயகுமார் கூறியுள்ளார்.

சைலஜா - நிகில் முன்கதை:
2015-ல் சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்தார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு சைலஜாவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில் - சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில்தான் டெல்லி வந்த நிகில் சைலஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அவர் மறுக்கவே கொலையில் முடிந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்ற சைலஜாவை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட நிகில் ஹண்டா தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதற்கு சைலஜா ஒப்புக் கொள்ளாததால் கழுத்தை அறுத்து சாலையில் வீசியதாகவும் நிகில் ஹண்டா வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கண்டிப்பு காட்டிய கணவர்:
சைலஜாவும் நிகிலும் ஒருநாள் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த மேஜர் திவிவேதி அவர்களைக் கண்டித்திருக்கிறார். மேஜர் ஹண்டாவையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறார். இதேபோல், மேஜர் நிகில் ஹண்டாவின் மனைவியும் நிகிலுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்திருக்கிறார்.

திருமணத்தைத் தாண்டிய இந்த உறவு இரண்டு குடும்பங்களையுமே வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்நிலையில்தான் சைலஜா கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close