[X] Close

டெல்லியில் பலாத்காரங்கள் அதிகரிப்பது ஏன்?- போலீஸார் அறிக்கை


migrant-anxiety-lifestyle-change-among-reasons-for-gangrape-in-delhi-panel

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Jun, 2018 13:32 pm
  • அ+ அ-

தலைநகர் டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பது தொடர்பாக அம்மாநில துணை நிலை ஆளுநர் அமைத்த 6 நபர் கொண்ட குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை முழுவதும் வெளிமாநில தொழிலாளர்களை குற்றஞ்சாட்டுவதாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

தேசத் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு (Women’s Safety in the National Capital Territory of India) என்று பெயரிடப்பட்டுள்ள அறிக்கையில் வெளிமாநிலத்திலிருந்து வேலைக்கு வரும் நபர்களாலேயே டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகக் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் உள்ள சில அம்சங்கள்:
1. வெளிமாநில வேலையாட்கள் டெல்லிவாசிகளால் ஒதுக்கிவைப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுகிறது.
2. டெல்லி போன்ற நகரில் பெண்கள் பொதுவாழ்வில் ஆணுக்கு நிகராக ஈடுபடுவதை கிராமங்களில் இருந்து வருபவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
3. வெளிமாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்கள் ஆணாதிக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். 
4. வெளிமாநில தொழிலாளர்களின் பேச்சு, ஜோக்குகளில் ஆபாசம் கலந்திருப்பதும் கூட்டு பலாத்காரங்களுக்கு காரணம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தயாரித்த குழுவில் போலீஸ் சிறப்பு ஆணையர் சஞ்சய் பன்னிவால், அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிருஷ்ண மேனன், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் பமீலா சிங், உளவியல் நிபுணர் நிமேஷ் தேசாய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அறிக்கையின் சாராம்சமாக "கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்பவர்கள் திடீரென வேறு ஒரு நவீன வாழ்க்கை முறையைக் காணும்போது அது இளம் வயதினரிடம் குறிப்பாக ஆண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நகர்ப்புறங்களில் வேலையில்லாமல் இருப்பது அவர்களை பலமற்றவர்களாக ஒதுக்கப்பட்டவர்களாக உணர வைக்கிறது. நகர்ப்புற வாழ்க்கையை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்ற தொடர் ஏக்கம் வன்முறையைத் தூண்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2015-ல் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 17,104 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1,893 பலாத்காரங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக இருக்கும் சூழலில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் காவல்துறை பெண்களுக்கு எப்படியெல்லாம் உறுதுணையாக இருக்கலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close