[X] Close

நிலத்தகராறில் பெண்ணை மார்பில் எட்டிஉதைத்தவர் கைது


for-kicking-woman-in-chest-over-land-dispute-telangana-official-arrested

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Jun, 2018 16:20 pm
  • அ+ அ-

நிலத்தகராறில் பெண்ணை மார்பில் எட்டிஉதைத்த கிராம அலுவலர் ஒருவரை தெலங்கானா போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாடி கோபி, என்ற அவர் தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அவருக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.33 லட்சத்துக்கு விற்றுள்ளார். 10 மாதங்களுக்கு முன் இந்த விற்பனை நடந்திருக்கிறது. ஆனால் நிலத்தை வாங்கியவரிடம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.

அந்த நிலத்தின் சந்தை மதிப்பு கடந்த 10 மாதங்களில் அதிகரித்துவிட்டதால் கூடுதலாக ரூ.50 லட்சம் கேட்டுள்ளார். ஆனால், நிலத்தை வாங்கிய பெண் கோபி கேட்டத் தொகையை தர ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் பேசிய தொகைக்குத்தான் நிலத்தைத் தர வேண்டும் என்றார்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்துள்ளது. ந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கோபியின் வீட்டுக்குச் சென்றுள்ளார் அந்தப் பெண். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது அந்தப்பெண் கோபியை தனது காலணியைக் கொண்டு தாக்கியுள்ளார் பதிலுக்கு கோபி அப்பெண்ணின் மார்பில் எட்டி உதைத்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோபியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close