[X] Close

கொலை மிரட்டல் விதிமீறல் இல்லையா?- இன்ஸ்டாகிராமை விளாசும் பெண் பத்திரிகையாளர்


i-got-a-death-threat-on-instagram-nidhi-razdan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jun, 2018 12:15 pm
  • அ+ அ-

கொலை மிரட்டல் வாசகம் விதிமுறை மீறல் இல்லை என விளக்கமளித்துள்ள இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடுமையாக சாடியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்ஸ்டாகிராமின் பிரைவேட் மெசேஜ் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு நான் புகார் அளித்தேன். ஆனால், அவர்களோ "இது எங்களது சட்டத்திட்டங்களை மீறுவதாக அமையவில்லை. ஒருசில மெசேஜுகளை தனியாக வாசிக்கும்போது அவை அவதூறாகத் தெரியலாம்" என பதில் அளித்துள்ளனர். எனது இன்ஸ்டாகிராமை கணக்கை டெலீட் செய்கிறேன். அத்துடன் ஒரு எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்கிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தப் பெண் பத்திரிகையாளரின் ட்வீட்டுக்கு கீழ் பிரபலங்கள் பலர் கருத்துகளை தெரிவித்து வருக்கின்றனர். பிரபல எழுத்தாளர் ராணா அயூப், "ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் நிறுவனங்களின் தனிநபர் சுதந்திர கொள்கைகளை எதுவுமே மீறவில்லை என்றுதான் அவர்கள் சொல்வார்கள். ஏனெனில் அவர்களும் வெறுப்புப் பிரச்சாரங்களின் தூதுவர்கள்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கும் பிரபலங்கள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். கொலை மிரட்டல் எப்படி விதிமுறை மீறல் இல்லாமல் போகும் என ஃபர்ஹான் அக்தார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து மற்றொரு பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர், "எனக்கு ஒரு முறை ட்விட்டரில் பலாத்காரம் மற்றும் படுகொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், ஐடி செல் போலீஸாரால் எனக்குப் பெரிதாக உதவ முடியவில்லை. அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் பலாத்கார, படுகொலை மிரட்டல் குறித்து புகார் மட்டும் அளிக்குமாறு அறிவுரை கூறினர்" எனப் பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில பத்திரிகையாளர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close