[X] Close

போதை வெற்றிலை தந்து பெண்ணை பலாத்காரம் செய்த பான்மசாலாக் கடைக்காரர் கைது


hyderabad-techie-allegedly-raped-says-was-given-paan-laced-with-drugs

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jun, 2018 13:24 pm
  • அ+ அ-

ஹைதராபாத்தில் போதை வெற்றிலையைக் கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பான்மசாலாக் கடைக்காரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா (33). இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. 4 ஆண்டுகளாக நீடித்த இந்த நட்பு ஒருகட்டத்தில் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால், உபேந்திரா தனக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்திருக்கிறார்.

இந்நிலையில், உபேந்திராவை சந்திக்க அந்தப் பெண் நேரில் சென்றிருக்கிறார். அப்போது பான்மசாலா வெற்றிலை ஒன்றை அப்பெண்ணுக்கு உபேந்திரா கொடுத்துள்ளார். அப்பெண்ணும் அதை சாப்பிடிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அவர் மயங்கிவிட அப்பெண்ணை உபேந்திரா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சில ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் எடுத்திருக்கிறார். நடந்ததை அறிந்த அந்தப்பெண் உபேந்திராவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், உபேந்திரா திருமணம் செய்ய மறுத்ததோடு ஆபாசப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் பெண்ணின் புகார் அடிப்படையில் போலீஸர் ஐபிசி 376, (பாலியல் பலாத்காரம்) 417 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், உபேந்திரா அந்தப் பெண்ணுக்கு போதை மருந்து கலந்த பான் மசாலா கொடுக்கவில்லை எனக் கூறிவருகிறார். மேலும், அவரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கூறிவருகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close