[X] Close

2 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்: ஆந்திரா அதிர்ச்சி


2-year-old-raped-by-14-year-old-boy-near-srikakulam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Jun, 2018 09:53 am
  • அ+ அ-

ஆந்திர மாநிலம்` ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 2 வயது குழந்தையை 14 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில், "ஸ்ரீகாகுளம் வஜ்ரபுக்கொட்டூரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை 14 வயது சிறுவன் ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த குழந்தையை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

சிறுவனின் தாத்தா இந்த சம்பவத்தைப் பார்த்தும் அவர் அக்குழந்தையைக் காப்பாற்றவில்லை. சிறுவனைப் பிடிக்க முயன்றிருக்கிறார் ஆனால் சிறுவன் தப்பித்துவிட்டான். பின்னர் ஊர்ப்பஞ்சாயத்தில் சம்பவம் குறித்து விவாதித்திருக்கின்றனர். அங்கேயே சமாதானம் பேசப்பட்டிருக்கிறது.

ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் சமாதானமடையவில்லை. அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போஸ்கோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close