[X] Close

பூ பறித்ததற்காக மாமியாரை அடித்து உதைத்த மருமகள்: காட்டிக்கொடுத்த வைரல் வீடியோ


kolkata-woman-thrashes-mother-in-law-viral-video-leads-cops-to-arrest-the-abuser

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 May, 2018 14:34 pm
  • அ+ அ-

கொல்கத்தாவில் தனது அனுமதியில்லாமல் வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்த மாமியாரை மருமகள் ஒருவர் இரக்கமின்றி அடித்த சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதன் அடிப்படையில் போலீஸார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிந்த சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்தனர்.

தெற்கு கொல்கத்தாவின் பஸ்த்ரோனி பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் வயதான பெண் ஒருவரை நடுத்தர வயது கொண்ட பெண் ஒருவர் வசைபாடிக் கொண்டே அடிப்பது பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவைப் பலரும் கொல்கத்தா போலீஸாரை டேக் செய்து பகிர்ந்தனர். இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த கொல்கத்தா போலீஸார் அடுத்த நாளே அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் யசோதா பால் என்றும் அவர் அம்னீஸியா என்ற நோயால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்டவரைக் கைது செய்த கொல்கத்தா போலீஸார் அவரது புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தது. தாக்குதலில் ஈடுபட்ட ஸ்வப்னா பால் தற்போது சிறையில் உள்ளார்.

போலீஸாரின் அந்த முகநூல் பதிவைப் பார்த்த ஸ்வப்னாவின் அக்கம்பக்க வீட்டார், ஸ்வப்னா எப்பவுமே தனது மாமியாரை இப்படித்தான் கொடுமைப்படுத்துவார் என்று பதிவு செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இதேபோல், கேரள மாநிலம் கண்ணூரில் மூதாட்டி ஒருவர் அடித்துத் துன்புறுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. மூதாட்டியை மீட்ட போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.
நாம் என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் கேமராவின் கண்களில் தப்ப முடியாது என்ற அளவுக்கு கால சூழல் மாறிவிட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close