[X] Close

மோடியைத் தெரியாது என்று கூறிய தொழிலாளிக்கு அடிஉதை: வைரலாகும் வீடியோ


man-thrashed-in-train-for-failing-to-answer-questions-on-pm-modi-national-anthem

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 May, 2018 09:09 am
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் பயணிகள் ரயிலில் ஏறிய வெளிமாநிலத் தொழிலாளி ஒருவர் தனக்கு பிரதமரின் பெயர் தெரியாது எனக்கூறியதற்காக அதே ரயிலில் பயணித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்துத் தாக்கிய சம்பவம் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து காலியாசாக் பகுதிக்கு செல்வதற்காக இளைஞர் ஒருவர் பயணிகள் ரயிலில் ஏறினார். அதே பெட்டியில் மேலும் 4 பேர் ஏறினர். அவர்கள் அந்த வெளிமாநிலத் தொழிலாளி அருகே அமர்ந்தனர்.
அவரிடம் முதலில் மேற்குவங்க முதல்வர் யார் என அந்தக் கும்பல் கேட்க. அவரோ மம்தா பானர்ஜி என சரியாக பதில் சொல்கிறார். அத்துடன் அந்தக் கும்பல் நிறுத்தவில்லை.

பிரதமர் யார்? தேசிய கீதம் பாடத் தெரியுமா? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்புகிறது. அதற்கு அவர் தெரியாது என பதில் சொல்ல, அவரை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்குகிறது. இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைகிறார். தொடர்ந்து அவரை அவ்வப்போது கன்னத்தில் அடிப்பதும் துன்புறுத்துவதுமாக அந்த கும்பல் இருக்கிறது.

பின்னர் அந்த கும்பல் பண்டல் ஸ்டேஷனில் இறங்கிச் சென்றுவிடுகிறது. ரயிலில் பயணித்த யாரோ ஒருவர் அங்கு நடந்த சம்பவங்களைப் படம் பிடிக்க அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அடிப்படையில் பங்க்ளா சங்கிரிதி மன்சா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. காலியாசாக் காவல் நிலைய போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close