[X] Close

ஈவினிங் ஷோ சினிமா பார்க்கும்போது, இருட்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ‘காட்டிக்கொடுத்தது சிசிடி கேமரா’ - சிக்கினார் தொழிலதிபர்


man-arrested-for-abusingminor-girl-in-cinema-hall

  • நெல்லை ஜெனா
  • Posted: 13 May, 2018 15:02 pm
  • அ+ அ-

நாடுமுழுவது சமீபகாலமாக அடுத்தடுத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரும் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் சமீபத்தில் நடந்த பாலியல்  துன்புறுதல் பெரிய அளவில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற 12 வயது சிறுமிக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.

அந்த சிறுமி தன்னுடன் வந்த பெண்ணிடம் இதுபற்றி கூறினார். ஆனால் சினமா பார்ப்பதில் ஆர்வம் காட்டிய அந்த பெண், சிறுமியின் புகாரை கண்டு கொள்ளவில்லை. இதனால் அந்த நபர் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இருட்டை பயன்படுத்தி அருகில் அமர்ந்து இருந்த சிறுமிக்கு அவர் பாலியல் கொடுமை செய்துள்ளார். சினிமா முடிந்ததும், யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் அந்த நபர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த சம்பவம் ஏப்ரல் 18-ம் தேதி நடந்துள்ளது.

அந்த தியேட்டரில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.  இந்த நிலையில் ஏறக்குறைய 20 நாட்களுக்கு பிறகு, சினிமா தியேட்டரில் திருட்டு குறித்த புகார் ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தியேட்டர் ஊழியர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏப்ரல்18-ம் தேதி பதிவான காட்சிகளில் சிறுமிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக சினிமா தியேட்டர் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் அடையாளத்தை வைத்து தேடியதில் திரிதுலாவைச் சேர்ந்த மைதின் குட்டி என்பது தெரிய வந்தது. அவர் அந்த பகுதியில் பிரபல தொழிலதிபர் ஆவார். தொழிலதிபர் என்பதால் அவரை கைது செய்ய போலீஸார் தயக்கம் காட்டினார். அரசியல் தலையீடும் இருந்தாக கூறப்படுகிறது.

ஆனால், பேத்தி வயதுள்ள சிறுமிக்கு அவர் செய்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல் வெளியானதும், மலப்புரம் மாவட்டமே கொதித்து விட்டது. அந்த நபரை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடந்தன. மாநில மனித உரிமை ஆணையும் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து வேறு வழியின்றி அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close