[X] Close

4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு


indore-man-sentenced-to-death-for-rape-and-murder-of-4-month-old

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 May, 2018 16:15 pm
  • அ+ அ-

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த மாதம் 4 மாத பெண் குழந்தையைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற நபருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது இந்தூர் செசன்ஸ் நீதிமன்றம்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்ரம் ஷேக், இந்த வழக்கை அரிதினும் அரிதாகக் கருதி தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதி வர்ஷா வர்மாவிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதி போஸ்கோ சட்டத்தின் கீழ் குற்றவாளி நவீன் கட்கேவுக்கு தூக்கு தண்டனை விதித்தார்.

நடந்தது என்ன?
கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை பகுதியில் கைக்குழந்தை ஒன்றுடன் அதன் பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன் என்ற நபர் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார். நவீன் அந்தக் குடும்பத்துக்கு தெரிந்த நபரே. அருகிலிருந்து கட்டிடத்தின் தரைத்தளத்துக்குச் சென்று நவீன் குழந்தையை அங்கு வைத்து பலாத்காரம் செய்துள்ளார். குழந்தை தொடர்ந்த அழவே குழந்தையின் வாயைப் பொத்தி மூர்ச்சையடையச் செய்துள்ளார். பின்னர், குழந்தை தரையில் ஓங்கி வீசி கொன்றுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் முடிந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். தரைத்தளத்தில் கடை வைத்திருந்த நபர் ஒருவர் கடையைத் திறக்க வந்தபோது குழந்தையின் சடலத்தைக் கண்டு போலீஸில் புகார் கொடுத்தார்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நவீன் குழந்தையை தோளில் சுமந்து செல்வது தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் நவீனை அடையாளம் காட்டினர். பின்னர், போலீஸார் நவீனை கைது செய்தனர். குற்றம் நிரூபணமான நிலையில் நவீனுக்கு போலீஸார் தூக்கு தண்டனை வழங்கியுள்ளனர்.

நீதிமன்றத்துக்குள் நவீன் அழைத்துச் செல்லப்பட்டபோதும் பின்னர் நீதிமன்றத்திலிருந்து அழைத்து வரப்பட்டபோதும் நவீனை பொதுமக்கள் காலணிகளை வீசித் தாக்கினர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close