[X] Close

பலாத்கார வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட வக்கிரம்


woman-s-rape-video-goes-viral-in-up-family-demands-justice

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Apr, 2018 10:45 am
  • அ+ அ-

உத்தரப் பிரதேச மாநிலம் கனூஜ் சமாதன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பகீர் புகார் ஒன்று போலீஸில் பதிவானது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி ஊடகங்களில் கூறும்போது, "கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எனது சகோதரியை தாலிப், சல்மான் என்ற இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆனால், மானத்துக்கு அஞ்சி என் சகோதரி வீட்டில் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் அந்த பலாத்கார வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், எங்கள் குடும்பமே நொறுங்கிப் போய் உள்ளது. குற்றவாளிகளைப் போலீஸார் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்காவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்வோம்" என்றார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வக்கிரங்கள்..

அண்மையில், டெல்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவரை அண்டை வீட்டுக்காரரே ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து அந்த வீடியோவை பெற்றோர்களுக்கு அனுப்பிய கொடூரம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக பலாத்கார வீடியோக்கள் எடுப்பது அதை வாட்ஸ் அப் க்ரூப்களில் பதிவிடுவது என்கிற வக்கிரம் அதிகரித்துள்ளது.

இப்படித்தான், வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்த ஆபாசத் தகவலைக் கொண்டு பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரைத் தேடி வருகிறது ஹைதராபாத் போலீஸ். கோடை விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சிறுவனை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததை தனது நண்பர்களுடன் அவர் பகிர்ந்தது ஹைதராபாத் போலீஸுக்கு தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீஸார் அந்த நபரைத் தேடி வருகின்றனர்.

பிஹாரிலும்கூட சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பரவவிட்டக் கொடூரம் நடந்துள்ளது.

பாலியல் குற்றங்கள் சைபர் குற்றங்களாகவும் உருவெடுத்து வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.
 

வாக்களிக்கலாம் வாங்க

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close