[X] Close

மருத்துவ செலவுக்காக டெல்லி தம்பதி நூதன மோசடி


delhi-woman-gave-cancelled-cheque-for-a-loan-it-cost-her-rs-3-8-lakh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Apr, 2018 11:07 am
  • அ+ அ-

மருத்துவ செலவுக்காக டெல்லியைச் சேர்ந்த தம்பதி நூதன முறையில் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "மேற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவரை வங்கி ஊழியர் எனக் கூறிக்கொண்டு சோபனா என்ற பெண் அணுகியுள்ளார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சோபனா பெற்றுக் கொண்டுள்ளார். அப்போது, காசோலை ஒன்றையும் பெற்றுள்ளார். காசோலையை கிராஸ் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணின் கண் முன்னாலேயே காசோலையில் கோடு போட்டுள்ளார்.

ஆனால், லாவகமாக ஒரு கோடு மட்டும் போட்டிருக்கிறார். காசோலையைக் கொடுத்த பெண்ணோ இரண்டு கோடுகள் போட்டதாக நினைத்துக் கொண்டுள்ளார். சோபனா வீட்டிலிருந்த சென்ற அரை மணி நேரத்தில் காசோலையை வழங்கிய பெண்ணின் செல்போனுக்கு ரூ.3.80 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. பதறி அடித்துக்கொண்டு அந்தப் பெண் வங்கிக்குச் சென்றார். ஆனால், வங்கியில் உங்கள் கையெழுத்து காசோலையில் இருந்தது; நாங்கள் ஒன்னும் செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் தீபக் அரோரோ மற்றும் அவரது மனைவி சோபனா கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சோபனா அவரது மருத்துவச் செலவுக்காக இந்த நூதன மோசடி யோசனையத் தந்ததாகவும் அதற்கும் தானும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றிய பணத்தில் ஐபிஎல் பெட்டிங்..

3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தில் பாதியை தனது மனைவியிடம் கொடுத்த தீபக் அரோரா மீதி பணத்தை தான் எடுத்துக் கொண்டு உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூருக்குச் சென்றுள்ளார். அங்கு கிரிக்கெட் புக்கிக்களுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போலீஸ் தீபக் அரோராவை கைது செய்யும்போது அவரிடம் வெறும் ரூ.60,000 மட்டுமே இருந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close