[X] Close

பிரதமர் மோடியை கொல்லப்போவதாக வாட்ஸ்அப் குரல் பதிவில் பேசியவர் கைது 


whatsapp-audio-controversy

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 12:31 pm
  • அ+ அ-

கோவை மாநகர காவல் ஆணை யர் கே.பெரியய்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமோதரன் செல்போனில் வந்த வாட்ஸ்அப் குரல் பதிவில், குனியமுத்தூர் முகமது ரஃபீக் (எ) ரஃபீக் என்பவரது படத்துடன் கூடிய குரல் பதிவில், சேலத்தைச் சேர்ந்த வாகன பைனான்சியர் பிரகாஷ் என்பவர் ரஃபீக்குடன் பேசுகிறார். அப்போது ரூ.2 லட்சம் பணத்துடன் உக்கடம் வந்து காரை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறார்.

மேலும், அவர் பேசும்போது, ‘மோடியைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறோம். அத்வானி வரும்போதே கோவையில் குண்டு வைத்தவர்கள் நாங்கள். நான் என்எஸ்ஏ, தடா, குண்டாஸ் என பல வழக்குகளைப் பார்த்தவன். 160 வண்டிகளை உடைத்துள்ளேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று அவருடைய உரையாடல் தொடர்கிறது.

பிரதமர் மோடியை கொல்ல முடிவு செய்துள்ளதாகப் பேசி, கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் ரஃபீக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவர், கோவையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் தண்டனை அனுபவித்தவர். காவல் நிலையங்களில் இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவரை, கரும்புக்கடை ஆப்பிள் கார்டன் பகுதியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close