[X] Close

ஓடும் காரில் 16 வயது சிறுமி பலாத்காரம்


16-year-old-gang-raped-in-moving-car

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Apr, 2018 12:23 pm
  • அ+ அ-

கிரேட்டர் நொய்டா பகுதியில் ஓடும் காரில் 16 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார், "9-ம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவர் அவரது பள்ளிப் பேருந்தை தவறுவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிறுமியின் தூரத்து உறவினர் மற்றும் அப்பெண்ணின் வகுப்பில் படிக்கும் மாணவர் மற்றுமொரு பையன் என மூவர் ஒரு காரில் வந்துள்ளனர். அவர்கள் அந்தச் சிறுமியை வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளனர்.

தெரிந்தவர்கள் என்பதால் அச்சிறுமியும் காரில் ஏறியுள்ளார். ஆனால், கார் சிறிது தூரம் சென்றவுடன் அச்சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து மூவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவரது வாயில் மதுவை ஊற்றி பலவந்தப்படுத்தி குடிக்கச் செய்துள்ளனர். பின்னர், சாலையோரம் அவரை வீசிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் மகளைக் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் தேடியபோது சிறுமி கல்கோடியாஸ் கல்லூரி அருகே உள்ள சாலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்.

சிறுமி அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். மூவருமே தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close