[X] Close

காதலிக்க வற்புறுத்துவதாக அசாம் மாநில பெண் புகார்: 10 பேர் மீது வழக்கு


assam-girl-case

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 20 Apr, 2018 20:49 pm
  • அ+ அ-

காதலிக்க வற்புறுத்துவதாக அசாம் மாநில பெண் அளித்த புகாரின்பேரில், 10 பேர் மீது காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ வளாகத்திலுள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில், விடுதியில் தங்கி தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அவருடன் பணியாற்றிய அதே மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக், சுகுமாறன் ஆகிய இருவரும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தனியார் பின்னலாடை நிறுவனத்தில் புகார் செய்துள்ளார்.

கடந்த 16-ம் தேதி பணி முடித்துவிட்டு, விடுதிக்குஅப்பெண் நடந்து சென்றபோது, கார்த்திக், சுகுமாறன் ஆகிய இருவரும் மேலும் சிலரை சேர்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அவரை கடத்த முயன்றனராம். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் காப்பாற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்பேரில், கார்த்திக், சுகுமாறன் உட்பட 10 பேர் மீது காங்கயம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close