[X] Close

ஆம்லெட் தகராறில் மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய இருவர் கைது


omelette-country-bomb-hurled

  • kamadenu
  • Posted: 10 Apr, 2018 08:17 am
  • அ+ அ-

ஆம்லெட்டில் உப்பு இல்லாத தகராறில் புதுவை மாநிலம் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் தனியார் மதுக்கடை மீது 5 நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலம் திருபுவனை ஆண்டியார்பாளையத்தில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது.
இங்கு மதுபான கடையுடன் மது அருந்தும் இடமும் உள்ளது. 

நேற்று முன்தினம் மாலை இக்கடைக்கு மது அருந்த வந்த இருவருக்கு ஆம்லெட் தந்தபோது அதில் உப்பில்லை என்று தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த சென்ற அவர்கள் சிறிது நேரத்துக்குப் பிறகு மதுக்கடைக்கு வந்து மறைத்து வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டை மதுக்கடையின் மதுபானக்கூடம் மீது வீசினர். அவை பலத்த சப்தத்துடன் வெடித்தன. 

திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோலியனூரைச் சேர்ந்த தீனா (27), எல்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close