[X] Close

குடிக்காதே என்ற சித்தப்பாவை கொலை செய்த மகன் கைது


murdered-for-advising-to-quit-drinking

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 09:03 am
  • அ+ அ-

குடிபழக்கத்தை கைவிடும்படி அறிவுறுத்திய சித்தப்பாவை இரும்பு கம்பியால் குத்திக்கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:

காட்பாடி அடுத்த திருவலம், அரும்பருதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). லாரி உரிமையாளர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரஞ்சித்குமாருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அதேபகுதியில் ரஞ்சித்குமாரின் சித்தப்பா ரவிச்சந்திரன் (48) வசித்து வந்தார். ரவிச்சந்திரனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், அண்ணன் மகன் ரஞ்சித்குமார் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ரஞ்சித்குமார் மதுப்பழக்கத்துக்கு ஆளானது அவருக்கு பிடிக்கவில்லை.

இதனால், அண்ணன் மகனை நல்வழிப்படுத்த அவ்வப்போது அறிவுரை கூறி வந்ததாக தெரிகிறது. இது ரஞ்சித்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால், சித்தப்பா மீது கோபத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரஞ்சித்குமார் குடிபோதையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற ரவிச்சந்திரன் இதை தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் அங்கு மாடுகளை கட்டி வைக்கும் இரும்பு கம்பியை எடுத்து ரவிச்சந்திரன் வயிற்றில் குத்தினார். இதில், அவர் குடல் சரிந்து கீழே விழுந்தார். இதைகண்ட ரஞ்சித்குமார் அங்கிருந்து தப்பியோடினார்.

உடனே, அங்கிருந்தவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரவிச்சந்திரன் வரும்வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருவலம் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் மனைவி மோகனா (45) கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close