[X] Close

குடும்பத் தகராறில் விபரீதம்: மனைவியை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி


murder-wife-attack

  • kamadenu
  • Posted: 08 Apr, 2018 20:59 pm
  • அ+ அ-

தாரமங்கலம் அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தாரமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (70). கூலித் தொழிலாளியான இவரது மனைவி காவேரி (60). இவர்களது மகன் குமார் (35), மகள் காயத்ரி (22). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியே வசிக்கின்றனர்

தனியாக வசித்து வந்த பெருமாள், காவேரிக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு காவேரிக்கும், பெரு மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆவேச மடைந்த பெருமாள் அரிவாளால் காவேரியை வெட்டி கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.

காவேரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பெருமாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது காவேரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பெருமாள் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் காவேரியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாளை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close