[X] Close

தாராபுரம் அருகே இரட்டை குழந்தைகள் மர்ம சாவு


dharapuram-children-death

  • kamadenu
  • Posted: 08 Apr, 2018 20:55 pm
  • அ+ அ-


தாராபுரம் அருகே சின்னக்காம்பட்டி, பண்ணைத்தோட்டத்தைச் சேர்ந்த தம்பதி கந்தசாமி (36), கீர்த்தனா (20). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கவிபிரசாத், கவிபிரசாந்த் எனும் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக கீர்த்தனா தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான உடுமலை அருகே மலையாண்டிபட்டிணத்தில் பெற்றோருடன் இருந்துள்ளார். நேற்று மாலை பாட்டிலில் பால் குடித்துவிட்டு குழந்தைகள் தூங்கியுள்ளனர். வெகுநேரம் ஆகியும் அசைவின்றி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடுமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close