[X] Close

ஜெயங்கொண்டம் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவன்: நிர்கதியான குழந்தைகள்


husband-wife-attack

  • kamadenu
  • Posted: 08 Apr, 2018 11:53 am
  • அ+ அ-

மனைவியைக் கணவன் அடித்துக் கொன்றுவிட்டு போலீஸாரால் கைது செய்யப்பட, 3 குழந்தைகள் நிர்கதியான சம்பவம் அரியலூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள துளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (35) தன் மனைவி முத்துமாரியுடன் (30) 8 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்குமிடையே சமீபகாலமாக வாக்குவாதங்கள் தினசரி நடந்து வந்தன. இதனிடையே நடராஜன் மனைவி மீது வன்முறையைப் பிரயோகித்ததும் நடந்துள்ளது. 

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, இதில் கடும் ஆத்திரமடைந்த நடராஜன் மனைவி முத்துமாரியை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயத்துடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முத்துமாரி இறக்கும் வரையில் போலீஸார் நடராஜன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தற்போது முத்துமாரி இறந்ததையடுத்து நடராஜன் மீதான வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர். 

தாயையும் பறிகொடுத்து, தந்தையையும் கைது நடவடிக்கைக்கு இழந்த குழந்தைகள் மூவரும் தற்போது நிர்கதியாக விடப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close