[X] Close

சரக்கடிக்க காசு கொடுக்காத சகோதரரின் மூக்கைக் கடித்த இளைஞர்


denied-money-for-alcohol-drunk-man-bites-off-brother-s-nose

  • பாரதி ஆனந்த்
  • Posted: 06 Apr, 2018 12:32 pm
  • அ+ அ-

மது போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது அருந்த காசு கொடுக்க மறுத்த தனது சகோதரரின் மூக்கைக் கடித்துத் துப்பிய சம்பவம் நடந்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் கனூஜ் மாவட்டம் ராம்லால்பூர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர், இவரது சகோதரர் சோப்ரானிடம் மது அருந்த பணம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரது சகோதரரோ தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், தனது சகோதரரின் மூக்கைக் கடித்துத் துப்பியுள்ளார். சம்பவத்தின்போது, ஸ்ரீகாந்த் ஏற்கெனவே போதையில் இருந்ததாகவும் கூடுதலாக மது அருந்தவே பணம் கேட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சோப்ரான் மயங்கி விழுந்தார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சோப்ரான், "எனது சகோதரர் ஸ்ரீகாந்த் வெறி பிடித்தவர் போல் என்னைத் தாக்கினார். எனது மூக்கு முற்றிலுமாக சிதைந்துள்ளது. எனது கையிலும், வயிற்றிலும்கூட அவர் கடித்தார். என்னை மட்டுமல்ல எனது தாய், தந்தை, மாமா ஆகியோரையும் அவர் தாக்கினார்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close