[X] Close

ரூ.18 லட்சம் திருட்டு; காட்டிக்கொடுத்த திருடர்களின் வாட்ஸ் அப் குரூப்


fallen-mobile-phone-helps-delhi-police-crack-rs-18-lakh-theft-case-in-hours

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Apr, 2018 10:24 am
  • அ+ அ-

திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் தவறவிட்ட மொபைல் போன் உதவியுடன் ரூ.18 லட்சம் திருட்டு சம்பவத்தை போலீஸார் சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் பழைய லஜ்பத் ராய் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஆயுதம் ஏந்திய திருடர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நுழைந்தனர். கடைக்காரரும் ஊழியர்களூம் என்ன நடக்கிறது என உணர்வதற்குள் துப்பாகியைக் காட்டி மிரட்டிய இருவர் கடையில் இருந்த ரூ.18 லட்சம் பணம் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

கடை ஊழியர்களை கயிற்றால் கட்டி வாயில் டேப் ஒட்டிவிட்டு திருடர்கள் தப்பிச் சென்றனர். 
சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளிகப்பட்டது. போலீஸார் கடைக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து ஒரு மொபைல் போன் கைப்பற்றப்பட்டது. மொபைல் போன் யாருடையது எனப் போலீஸார் விசாரித்தபோது கடை ஊழியர்கள் அனைவரும் அந்த போன் தங்களுடையது அல்ல எனத் தெரிவித்துவிட்டனர். அந்த மொபைல் போனை சோதித்தபோது அது திருட்டு கும்பலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அதிலிருந்த வாட்ஸ் அப் குரூப் தகவல்கள் போலீஸாருக்கு பெரும் உதவியாக இருந்தன. இதேபோல், போலீஸார் சிசிடிவி ஆதாரங்களையும் சேமித்தனர்.

சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில், உத்தரப்பிரதேசம், டெல்லி பகுதிகளில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். இதில் மவுஜ்பூரைச் சேர்ந்த மொஷின் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மொஷின் அளித்த தகவலின்படி டெல்லி, காஜியாபாத் பகுதிகளில் பதுங்கியிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். சர்பராஸ் ஆலம், அமான், காசிம், சச்சின் ஆகியோர் கைதாகினர். அவர்களிடமிருந்து ரூ.13,86,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மூன்று நாட்டுத்துப்பாக்கிகள், 19 கார்ட்ரிட்ஜ்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமுள்ள தொகையையும் கைப்பற்ற போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close