[X] Close

ஓரினச் சேர்க்கையை எதிர்த்த தாயைக் கொன்ற மகள்


girl-kills-mother-after-she-opposes-lesbian-relationship-with-teacher

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Apr, 2018 10:50 am
  • அ+ அ-

டெல்லியில், தனது ஓரினச் சேர்க்கைப் பழக்கத்தைக் கண்டித்த தாயை மகளே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. டெல்லி கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மி ரானா (21). இவருக்கும் இவரது ஆசிரியைக்கும் இடையே ஓரினச் சேர்க்கை உறவு இருந்துள்ளது. இதனை ரேஷ்மியின் தாயார் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

ஆனால், ரேஷ்மி அதற்கு சிறிதும் செவி சாய்க்கவில்லை. ஒரு கட்டத்தில் தாயின் கண்டிப்பு ரேஷ்மியை எரிச்சலடையச் செய்துள்ளது. இதனால், தனது இணை நிஷா கவுதமாவுடன் சேர்ந்து தாயை இரும்புக் கம்பியால் தாக்கியே கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

வீடு திரும்பிய ரேஷ்மியின் தந்தை சதீஷ் குமார் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கொலையாகிக் கிடந்தததைப் பார்த்து அதிர்ந்து போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது மகள் மீது சந்தேகம் தெரிவித்து அவர் புகார் அளிக்கவே தலைமறைவான ரேஷ்மியைப் போலீஸார் தேடினர். இந்நிலையில், ரேஷ்மியையும் அவரது இணை நிஷா கவுதமையும் போலீஸார் காசியாபாத் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close