[X] Close

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ராதிகா ரெட்டி தற்கொலை


tv-anchor-radhika-reddy-commits-suicide

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Apr, 2018 09:00 am
  • அ+ அ-

தெலுங்கு சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா ரெட்டி தற்கொலை செய்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு 10.50 மணிக்கு, அவரது வீட்டிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில், "ராதிகா ரெட்டியின் வீடு மூசாபேட்டில் இருக்கிறது. இவர் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார். 5-வது மாடியில் வீடு அமைந்திருக்கிறது. நேற்றிரவு 10.50 மணியளவில் அவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சமீபகாலமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில், தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என அவர் எழுதிவைத்திருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close