[X] Close

ஆனைமலை அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: ரூ.10 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பின


robbery-incident-in-aanaimalai

கொள்ளை முயற்சி நடந்த வங்கியை ஆய்வு செய்யும் டிஎஸ்பி சுப்பிரமணியம்

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 11:13 am
  • அ+ அ-

ஆனைமலை அருகே தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் ரூ.10 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் தப்பின.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ஆனைமலை அருகே ஒடையகுளத்தில் சேத்துமடை சாலையில் சௌத் இந்தியன் வங்கி உள்ளது. 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை, 26-ம் தேதி வேலைநிறுத்தம் ஆகிய காரணங்களால் கடந்த இரு நாட்களாக வங்கி பூட்டப்பட்டு இருந்தது.

26-ம் தேதி இரவு மர்ம நபர், வங்கியின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, பின்புற ஜன்னல் கம்பியை ஆக்ஸா பிளேடால் அறுத்து உள்ளே நுழைந்துள்ளார். சிசிடிவி கேமராக்களின் இணைப்பை துண்டித்து விட்டு, லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை முயற்சி நிறைவேறாததால் வங்கி முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்துவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் காலை பணிக்கு வந்த துப்புரவு பணியாளர் மல்லிகா, கொள்ளை முயற்சி நடந்திருப்பதை வங்கி மேலாளர் ஸ்ரீஜித்துக்கு தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில், வால்பாறை டிஎஸ்பி சுப்பிரமணியம் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். கோவையிலிருந்து மோப்ப நாய் ஹேரி வரவழைக்கப்பட்டது. வங்கியின் உள்ளேயும் வெளியேயும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருந்ததால் ஹேரியால் மோப்பம் பிடிக்க முடியவில்லை’ என்றனர்.

வங்கி ஊழியர்கள் கூறும்போது, ‘வங்கியின் மின்இணைப்பு, யுபிஎஸ் இணைப்பு, அலாரம் ஆகியவற்றின் வயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வங்கி லாக்கர் அறையில் 5 நிலை பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் ரூ.10 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றனர்.

டிஎஸ்பி சுப்பிரமணியம் கூறும்போது,‘சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளியைக் கைது செய்வோம்’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close