[X] Close

கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை முயற்சி


father-try-to-kill-children

  • kamadenu
  • Posted: 30 Mar, 2018 14:28 pm
  • அ+ அ-

கும்பகோணம்  அருகே விவ சாயி கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்துவிட்டு, தானும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த பாலக்குடியைச் சேர்ந்தவர் சரவணன்(36), விவசாயி. இவரது மனைவி மாலதி(30). இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாதேஷ்(9), 3-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்(8) மற்றும் சரண்யா (3) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

சரவணன் தனது குடும்பச் செலவுக்காக அப்பகுதியில் உள்ளவர்களிடம் அதிக கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் கடன் தொகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், அவர் விரக்தியடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை மாலதி விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளோடு வீட்டில் இருந்த சரவணன், மதிய உணவில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, 4 பேரும் வீட்டுக்குள் மயங்கி கிடந்துள்ளனர்.

சரவணன் வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர், மயங்கிக் கிடந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close