[X] Close

மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்


woman-stabs-delivery-man-in-delhi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Mar, 2018 12:34 pm
  • அ+ அ-

டெல்லி நிஹால் விஹார் பகுதியில், மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கமல்தீப் (30) அவரது சகோதரர் ஜிதேந்திர சிங் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் கூறியதாவது:

கடந்த மார்ச் 21-ம் தேதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சந்தர் விஹார் பகுதியில் ஆண் ஒருவர் கத்திக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறினார். உடனடியாக நாங்கள் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்த்தோம்.
மூன்று நாட்களுக்குப் பிறகே அவர் பேசும் நிலைக்குத் திரும்பினார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது பெயர் கேசவ். அம்பிகா என்கிளேவில் வீடு இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். மார்ச் 21-ல் பெண் ஒருவர் ஆர்டர் செய்திருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு அப்பகுதிக்குச் சென்றேன். போனின் மதிப்பு ரூ.11000. எனக்கு அந்த ஏரியா பழக்கமில்லை என்பதால் வீட்டைத் தேடித் திரிந்தேன். அதற்குள் அந்தப் பெண் எனக்கு பல முறை போன் செய்துவிட்டார். பொறுமையிழந்து கத்தினார். ஒருவழியாக அவரது வீட்டைத் தேடிப்பிடித்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவர் திட்டினார். ஏன் இவ்வளவு நேரம் என வாக்குவாதம் செய்தார். பின்னர் உள்ளே சென்ற அவர் ஒரு கத்தியை எடுத்துவந்த என்னைத் தாக்கினார். என் அலறல் கேட்டு உள்ளிருந்து ஒரு நபர் வந்தார். அவர் அந்தப் பெண்ணை தடுக்க முயன்றார். ஆனால், அவரோ ஆவேசமாக தள்ளியிரு இல்லையென்றால் உன்னையும் குத்திவிடுவேன் என மிரட்டினார். பின்னர் அந்த நபரும் சேர்ந்துகொண்டு என்னைத் தாக்கினர். எனது மணிக்கட்டில் பல முறை அறுத்தனர். ஷூ லேஸ் கொண்டு என் கழுத்தை நெறிக்க முற்பட்டனர். பல்வேறு இடங்களிலும் நான் டெலிவரி செய்து வைத்திருந்த ரூ.40,000 பணத்தையும் திருடியுள்ளனர். என்னை ஒர் வேனில் ஏற்றி ஒரு கால்வாய் அருகே வீசிச் சென்றனர்" என்றார்.

அவர் சொன்ன அடையாளங்களை வைத்தும் சிசிடிவி ஆதாரங்களை வைத்தும் அந்தப் பெண்ணையும் அவரது சகோதரரையும் கைது செய்துள்ளோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close