[X] Close

ஆட்டோவில் பாலியல் துன்புறுத்தல்: திருவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை


women-commits-suicide-after-abuse

சக்கரைத்தாய் - இசக்கிமுத்து

  • kamadenu
  • Posted: 19 Dec, 2018 11:09 am
  • அ+ அ-

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கே.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் சக்கரைத்தாய் (23). இவருக்கும் நெல்லை மாவட்டம் கலிங்கபட்டி அருகே உள்ள மலையடிபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

10 நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு வந்த சக்கரைத்தாய் நேற்று முன்தினம் இரவு கணவர் வீட்டுக்குப் புறப்பட்டார். இதற்காக தொட்டியபட்டியிலிருந்து மினி பஸ் மூலம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வந்த சக்கரைத்தாய், அங்கிருந்து காந்தி சிலை ரவுண்டானா சென்று ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையம் புறப்பட்டார்.

ஆனால், ஆட்டோ ஓட்டுநர் புதிய பேருந்து நிலையம் சொல்லாமல், வேறு பாதையில் சென்று சக்கரைத்தாயை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்கரைத்தாய் தனது தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். நடந்ததை தனது தங்கை முருகவள்ளியிடம் கூறியுள்ளார்.

சற்று நேரத்தில் அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

வன்னியம்பட்டி போலீஸார் வழக்குபதிந்து, சக்கரைத்தாயை பாலியல் துன்புறுத்தல் செய்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆட்டோ ஓட்டுநர் ராஜபாளையம் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (28) என்பவரைக் கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close