[X] Close

மதுவுக்காக பெற்ற தாயைக் கொன்ற மகன் கைது


madhu-son-arrest

கலாவதி, நீலகண்டன்

  • kamadenu
  • Posted: 27 Mar, 2018 15:41 pm
  • அ+ அ-

வீட்டில் வைத்திருந்த தனது பங்கான மதுவை எடுத்துக் குடித்ததால் தாயை மகன் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து மகனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை ஷெனாய் நகர், டி.பி.சத்திரம், ஐந்து அடுக்கு குடியிருப்பில் வசிப்பவர், வெங்கடேசன் (63), இவரது மனைவி கலாவதி (54). இவர்களுக்கு நீலகண்டன் (25) என்ற மகன் உள்ளார்.

கலாவதி, நீலகண்டன் அனைவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று கலாவதி மது போதையில் வீட்டுக்கு வெளியே கிடந்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தவர் அவரது மகன் நீலகண்டனிடம் கூறியுள்ளனர்.

நீலகண்டன் தனது தாயார் கலாவதியை அழைத்துச் சென்று வீட்டுக்குள் படுக்க வைத்துள்ளார். பின்னர் நீலகண்டன் வெளியே சென்றுவிட்டார். வீட்டிலிருந்த கலாவதி அதன் பிறகு நீலகண்டன் வைத்திருந்த மதுவை எடுத்துக் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நீலகண்டன் தனது தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் கலாவதியை தாக்கி தள்ளிவிட்டுள்ளார். இதில் சுவற்றில் தலை மோதியதில் கலாவதி வலதுபக்க தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர் நீலகண்டனை பிடித்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
தாயை கொலைசெய்த குற்றத்திற்காக நீலகண்டனை டி.பி.சத்திரம் போலீஸார் கைது செய்தனர். கலாவதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close