[X] Close

சொகுசு கார்களை குறிவைக்கும் ‘தக் தக்’ கொள்ளையர்கள்: போலீஸ் அதிகாரியின் காரில் இருந்து ஐபேட், ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை


thak-thak-gang-strikes-again-steals-ipad-and-rs-20-000-from-former-police-chief

  • போத்திராஜ்
  • Posted: 26 Mar, 2018 15:36 pm
  • அ+ அ-

டெல்லியின் முன்னாள் போலீஸ் ஆணையர் பி.கே.குப்தாவின் காரில் இருந்து விலை உயர்ந்த ஐபேட், ரூ.20 ஆயிரத்தை தக் தக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தக் தக் கொள்ளையர் யார்?

தக் தக் கொள்ளையர்கள் என்பவர்கள், ஒரு பெண் உள்ளிட்ட குறைந்த 3 முதல் 4 ஆண்களாக கூட்டமாக இருப்பார்கள். இவர்களின் நோக்கம் விலை உயர்ந்த சொகுசு கார்களில் உள்ள பொருட்களை திருடுவதாகும். இதற்காக கார் டிரைவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், சில்லரை பணத்தை சிதறவிடுதல், காரில் ஆயில் லீக் ஆகிறது என்று கூறி கவனத்தை திசைதிருப்புதல், கார் டயர் பஞ்சராக்கிவிடுதல், காரின் பின்பக்க கண்ணாடிகளை கழற்றி கொள்ளையடித்தல் போன்றவற்றை செய்வார்கள்.

இன்னும் சிலர் பைக்கில் வந்து காரின்  பின்பக்கத்தை தட்டிவிடுவார்கள், டிரைவர் வாகனத்தை நிறுத்தி யார் என்று பார்க்க முற்படும் போது, காரில் உள்ள பொருட்களை கொள்ளையடிப்பார்கள். நாட்டின் பல்வேறு நகரங்களில் கொள்ளையடித்த பொருட்கள் டெல்லி கொண்டு வரப்பட்டு பிரிக்கப்படும் . இதுதான் தக் தக் கொள்ளையர்கள் செயல்படும் முறையாகும்.

இந்த தக் தக் கொள்ளையர்கள் டெல்லி வடக்கு மண்டல முன்னாள் போலீஸ் ஆணையர்  பி.கே. குப்தாவின் காரில் இருந்த ஐ பாட், ரூ.20 ஆயிரத்தை கொள்ளயடித்துள்ளனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து துணை போலீஸ் ஆணையர் ஜதின் நார்வால் தரப்பில் கூறுகையில், ‘சனிக்கிழமை மாலை குப்தாவும், அவரின் நண்பர்களும் டெல்லி சிவில் லைன்ஸ் ஏரியாவுக்கு கோல்ப் விளையாடச் சென்றனர். அவர்கள் தங்களின் காரில் இருந்து மற்றொரு காருக்கு பொருட்களை மாற்றும் பணியில் இருந்தனர். அப்போது, காரின் பின்பக்கத்தில் ஒரு பையில் இருந்த ஐபாட், ரூ.20 ஆயிரம்  பணத்தை யாரே சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை நடந்த இடத்தில் எந்தவிதமான கண்காணிப்பு கேமிராவும் இல்லாத  பகுதியாகும். எங்களின் முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்து கொள்ளையடிக்கும் தக் தக் கொள்ளையர்கள் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது, இந்த தக் தக் கொள்ளையர்கள் மற்றவர்களையும் பிடித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close