[X] Close

பொறையாறு அருகே லாரியில் கடத்திய 4,320 மது பாட்டில்கள் பறிமுதல்; ஓட்டுநர் கைது


lorry-kindap-tasmac

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 12:19 pm
  • அ+ அ-

நாகை மாவட்டம் பொறையாறு அருகே லாரியில் கடத்தப்பட்ட 4,320 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு அடிக்கடி மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொறையாறு போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு அனந்தமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரைக்கால் பகுதியிலிருந்து வந்த ஒரு லாரியை மறித்து நிறுத்தியபோது, அதிலிருந்த ஒருவர் லாரியிலிருந்து குதித்து தப்பியோடினார்.

தொடர்ந்து, லாரியில் சோதனையிட்டபோது, அதில், ஐஸ் பெட்டிகளுக்கு இடையே 90 அட்டைப்பெட்டிகளில் 4,320 மது பாட்டில்களும், 2 மூட்டைகளில் 200 லிட்டர் புதுச்சேரி சாராயமும் மறைத்து, கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, லாரி ஓட்டுநரான காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் ரமணன்(30) போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், மதுபாட்டில்கள் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அப்பு(எ) நிர்மல் குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close