[X] Close

நாமக்கல்லில் லாரி டயர் திருட்டில் ஈடுபட்ட 9 பேர் கைது


namakkal-lorry-tyre-theft

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 12:17 pm
  • அ+ அ-


 நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் லாரி டயர் திருட்டில் ஈடுபட்டு வந்த 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல், நல்லிபாளையம், புதுச்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் லாரி டயர் திருட்டு நடைபெற்று வந்தது.

இதில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவின்படி நல்லிபாளையம் காவல் ஆய்வாளர் தங்கவேல், உதவி ஆய்வாளர்கள் கதிரேசன், கார்த்திகேயன், மாதையன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் நேற்று முன்தினம் எர்ணாபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். இதில், திருச்செங்கோடு முசிறியைச் சேர்ந்த உதயகுமார் (28), நாமக்கல் பொம்மகுட்டைமேட்டைச் சேர்ந்த அபிமன்னன் (34), சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (23), கிருஷ்ணன் (49), நாமக்கல் தாளாம்பாடியைச் சேரந்த விஜயகுமார் (26), சதீஸ்குமார் (25), சாகுல் ஹமீது (32), சதீஸ்குமார் (29), ராஜ்குமார் (22) என்பதும், லாரி டயர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

சரக்கு ஆட்டோவுடன் செல்லும் இவர்கள், தனியாக நிற்கும் லாரிகளின் அருகில் வண்டியை நிறுத்தி 20 முதல் 30 நிமிடத்திற்குள் லாரியின் டயரை கழற்றிக் கொண்டு சென்று விடுவதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 26 டயர்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

மேலும், லாரி டயர் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் டயர் கழற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close