[X] Close

மூதாட்டிகளை குறிவைக்கும் வடமாநில கும்பல்: மர்மநபர்களை பிடிக்க போலீஸார் தீவிரம்


chain-snatchers-targets-old-ladies

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 11:26 am
  • அ+ அ-

மதுரை நகரில் தனியாகச் செல்லும் பெண்கள், மூதாட்டிகளிடம் திருட்டு, வழிப்பறி, கவனத்தை திசை திருப்பி நகை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. போலீஸ் என கூறி மூதாட்டிகளிடம் நகை பறிப்பது வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இக்கும்பலை சேர்ந்தோர் தங்கள் உறவினப் பெண்களையும் உடன் அழைத்து வருவதாக தெரியவந்துள்ளது. ஓரிடத்தில் வழிப்பறி செய்து விட்டு, மற்றொரு இடத்துக்கு உடனடியாகத் தப்புகின்றனர். வழிப்பறி செய்யும் நகைகளை பெண்களிடம் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் மற்றொரு ஊருக்கு சென்று அங்கு மூதாட்டிகளிடம் வழிப்பறி செய்கின்றனர்.

இந்நிலையில் மதுரை நகரில் முக்கிய சாலைகள், தெருக்களின் சந்திப்பு பகுதிகளை கண்காணிக்க டெல்டா குழுவினர், அதிவிரைவு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை பிடிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது, அவர் கூறியது: மதுரையில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி செயின் பறிப்பில் ஈடுபடுவது வடமாநிலக் கும்பல்தான் எனத் தெரியவந்துள்ளது. இதுபோனறு மூதாட்டிகளிடம் செயின் பறிக்கும் கும்பல் , ஈரோட்டில் போலீ ஸாரிடம் சிக்கி உள்ளது.

மதுரை செயின் பறிப்புகளில் அக்கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகிறோம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close