[X] Close

அய்யாக்கண்ணு உதவியாளரை தாக்கிய 3 பாஜகவினர் கைது


ayyakannu-asst-beat

அய்யாக்கண்ணு | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 26 Mar, 2018 11:54 am
  • அ+ அ-


தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணுவின் உதவியாளரை தாக்கிய பாஜகவை சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பழநியில் நேற்று முன்தினம் இரவு மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய பி.அய்யாக்கண்ணு, மலையடிவாரம் பகுதியில் காரில் ஏறியபோது சிலர் தாக்க முயன்றனர். இதில் அவரின் உதவியாளர் தஞ்சாவூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தாக்குதலுக்குள்ளானார்.

இதுகுறித்து பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாஜக பழநி நகர பொதுச்செயலாளர் ஹரிஹரன்(47), இளைஞரணி நகரத் தலைவர் ஸ்டாலின்ராஜ்(28), கட்சி உறுப்பினர் ஆனந்தன்(44) ஆகியோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் அடிவாரம் போலீஸார் கைது செய்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close