[X] Close

புதுச்சேரி இளைஞர் கொலை வழக்கில் 10 பேர் கைது


pudhucherry-saravanan-murder

புதுச்சேரியில் இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸார் உள்ளனர்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 15:44 pm
  • அ+ அ-


 

புதுச்சேரியில் இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திலாசுப்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்தவர் ஜாக்கி (எ) சரவணன் (19). காந்திநகர் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம கும்பலால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகளின் அடையாளம் தெரிந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலங்குப்பம் ஏரிக்கரை பகுதியில் பதுங்கியிருந்த கொலையாளிகளை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், மாந்தோப்பைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், காமராஜர் நகரைச் சேர்ந்த அன்பு, சூரியமூர்த்தி, மணிகண்டன், அஐய்குமார், காந்தி நகரைச் சேர்ந்த ராம்குமார், விக்னேஷ், அஜித்குமார், ஜிப்மர் ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த ரூபன், எல்லைப்பிள்ளைச்சாவடி தர்மா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், ஆனஸ்ட்ராஜ்ஜின் தங்கை அஜிதாவை, சரவணன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சரவணன் தினமும் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில், அஜிதாவின் படத்தை கேட்டு அவரது குடும்பத்தை தொந்தரவு செய்துள்ளார். இதனால் சரவணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று சரவணனும் அவரது நண்பர்களும் காந்தி நகரில் உள்ள பீட்சா கடைக்கு வந்தனர். அப்போது சரவணன் மட்டும் வெளியே வந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வீச்சரிவாள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய ஜொஸ்வா, சாந்தகுமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close