[X] Close

மிளகாய் செடிகளை பறித்தவர் கைது


chilli-plant-snatch

பிரதிநிதித்துவப் படம்

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 15:32 pm
  • அ+ அ-

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தோட்டத்தில் விளைந்திருந்த மிளகாய் செடிகளைப் பறித்ததாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

திருச்சுழி அருகே உள்ள மேலக்குருணைக்களத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி மச்சம்மாள் (40). விவசாயியான இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மிளகாய் செடிகள் தொடர்ந்து திருடு போனது. அதையடுத்து, பாண்டியும் அவரது மனைவியும் தோட்டத்தில் காவல் இருந்தனர். அப்போது, அருப்புக்கோட்டை அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த கணேசன் (27) என்பவர் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஏராளமான மிளகாய் செடிகளை பறித்துள்ளார். இதை பார்த்த பாண்டி அவரை கையும், களவுமாக பிடித்து திருச்சுழி போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸார் அவரை கைது செய்தனர்.
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close