[X] Close

திருநள்ளாறில் குழந்தையை கடத்தியதாக தந்தை உட்பட 4 பேர் கைது


child-kidnap-in-thirunallar

மாதிரிப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 14:32 pm
  • அ+ அ-

 

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்புராயபுரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகள் விஜயசாந்திக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் செல்வக்குமார்(40) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரவிவர்மன் (5) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2015-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருநள்ளாறில் உள்ள தனது தந்தை வீட்டில் குழந்தை ரவிவர்மனுடன் வசித்து வரும் விஜயசாந்தி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நாகையைச் சேர்ந்த கார்த்திக்(24), வீரமோகன்(24), விஜயன்(28) ஆகிய 4 பேரும் காரில் விஜயசாந்தி வீட்டுக்குச் சென்று, விஜயசாந்தியின் தந்தை உள்ளிட்டோரை தாக்கிவிட்டு, குழந்தை ரவிவர்மனை கடத்திச் சென்றனர்.

தகவலறிந்த திருநள்ளாறு போலீஸார், அம்பகரத்தூர் அருகே காரை மறித்து, செல்வக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், குழந்தையை மீட்டு விஜயசாந்தியிடம் ஒப்படைத்தனர்.

 


 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close