[X] Close

தஞ்சாவூர் அருகே சத்துணவு சமையலர் கொலை; கணவர் தலைமறைவு


tanjore-murder-husband

பிரதிநிதித்துவ படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 13:54 pm
  • அ+ அ-

 

சத்துணவு சமையலரை கொலை செய்துவிட்டு, தலைமறைவான அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை அடுத்த இந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி (47). அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 பெண், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், மலர்கொடி நேற்று முன்தினம் வேலை முடித்து இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, அவர் அப்பகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த பூதலூர் போலீஸார் அங்கு சென்று, மலர்கொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக மலர்கொடியை பன்னீர்செல்வமே கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.
 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close