[X] Close

மன்னார்குடியில் பாலில் விஷம் கலந்து குடித்து 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி


mannarkudi-suicide-attempt

பிரதிநிதித்துவ படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 13:49 pm
  • அ+ அ-

 

மன்னார்குடியில் மதுக்கூர் சாலை பகுதியில் உள்ள முனிசிபல் காலனியில் வசித்து வருபவர் ஆலமுத்து மனைவி தமிழரசி(30). இவருக்கு ஷியாம்(11), மணீஷா(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஷியாம் 6-ம் வகுப்பும், மனீஷா 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், துபாயில் வேலைக்குச் சென்ற தமிழரசியின் கணவர் ஆலமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதனால், மன உளைச்சலில் இருந்த தமிழரசி, வறுமை காரணமாக குடும்பத்தை நடத்தவும் கஷ்டப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் குழந்தைகளுக்கு பாலில் விஷத்தை கலந்துகொடுத்துவிட்டு, தானும் விஷம் கலந்த பாலை குடித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, தமிழரசியும் குழந்தைகளும் மயங் கிய நிலையில் கிடந்தனர்.

அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வறுமை காரணமாகவே பாலில் எலிமருந்து விஷம் கலந்து குடித்ததாக போலீஸாரிடம் தமிழரசி தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close