[X] Close

மேட்டூர் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வெறிச்செயல்


mettur-youth-murder

சித்தரிப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 11:37 am
  • அ+ அ-

 

மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தனர்.

மேட்டூரை அடுத்த குள்ளவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் குள்ளவீரன்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சென்றார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் கண்ணனை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்றனர். தப்பி ஓடிய கண்ணன், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். எனினும், அவரை விடாத மர்ம நபர்கள், கதவை உடைத்து திறந்து, கண்ணனை வெளியே இழுத்து வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேட்டூர் டிஎஸ்பி சவுந்திரராஜன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணனின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். பெண் விவகாரம் தொடர்பாக எழுந்த விரோதத்தால் கண்ணனை அவரது நண்பர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close