[X] Close

உயிர் காக்க சாலைக்கு வந்த எமதர்மன்: பொதுமக்களை கவர்ந்த வினோத பிரச்சாரம்


police-helmet-awareness

சாலையில் ஹெல்மட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம தர்மன்

  • முத்தலீப்
  • Posted: 24 Mar, 2018 17:48 pm
  • அ+ அ-

சென்னையில் எமதர்மனை அழைத்து வந்து போக்குவரத்து போலீஸார் வினோத பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஹெல்மட் அணியாவிட்டால் பாசக்கயிறை வீசுவேன் என எம தர்மன் வாகன ஓட்டிகளிடம் தெரிவித்தார்.

சென்னையில் ஹெல்மட் விழிப்புணர்வு பிரச்சாரத்தை போலீஸார் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் செய்தனர். சமீப காலமாக போக்குவரத்து போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் பொதுமக்களிடையே வெறுப்புணர்ச்சி அதிகரித்து வருகிறது.

போலீஸார் தாக்கிய இளைஞர்களை சந்தித்து நல்லிணக்கம் காண வேண்டும் என கமிஷனர் உத்தரவின் பேரில் போரூரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்கே போலீஸார் சென்று மன்னிப்பு கேட்டனர். மறுபுறம் போலீஸார் மன உலைச்சலை தவிர்க்கும் நடவடிக்கைகளும் போலீஸாரால் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹெல்மட் வழக்குகளில் போலீஸார் கடுமை காட்டுவதால் பல இடங்களில் மோதல் ஏற்படுகிறது, கடந்த 2 நாட்களுக்கு முன் வேளச்சேரியில் ஹெல்மட்டுக்காக போலீஸார் அபராதம் விதிக்க இளைஞர்கள் சிலர் போலீஸாருடன் மோதலில் ஈடுபட பின்னர் சிலர் மீது வழக்கு போடப்பட்டது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீஸார் ஹெல்மட் குறித்த விழிப்புணர்வுக்கு ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர். எமதர்மன் வேடமிட்ட ஒருவர் பாசக்கயிறுடன் கடற்கரை சாலை சிக்னலில் நிற்கிறார். ஹெல்மட் அணியாத வாகன ஓட்டிகள் மீது பாசக்கயிறை வீசி ஹெல்மட் உயிர்காக்கும் கவசம் அணியாமல் போகாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்குகிறார்.

அவருடன் போக்குவரத்து போலீஸார் ஹெல்மட் அவசியம் குறித்த பதாகைகளை பிடித்தபடி நின்று வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மட் அவசியம் குறித்து விளக்கினர். போலீஸாரின் இந்த புதிய முயற்சியை பொதுமக்கள் ரசித்து வரவேற்றனர். பின்னர் தாங்கள் அவசியம் ஹெல்மட் அணிவதாக சிரித்தபடி கூறிச் சென்றனர்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close