[X] Close

வள்ளியூர் பேருந்து நிலையம் எதிரே இளம்பெண் குத்தி கொலை : பட்டதாரி இளைஞர் வெறிச்செயல் 


young-lady-killed-in-broad-daylight

மெர்சி

  • kamadenu
  • Posted: 28 Nov, 2018 13:08 pm
  • அ+ அ-

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் எதிரே இளம்பெண்ணை பட்டதாரி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் மெர்சி (20). வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் மனிதவளத்துறை பிரிவில் பணியாற்றி வந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த ஜவுளி கடையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரவீந்திரன் (29) என்பவரும் சில மாதங்கள் பணிபுரிந்துள்ளார். பி.இ. பட்டதாரியான ரவீந்திரனுக்கும் மெர்சிக்கும் அப்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ரவீந்திரனை ஜவுளிக் கடை நிர்வாகம் வேலையிலிருந்து நிறுத்தியது.

நேற்று மாலை பணி முடிந்து மெர்சி பேருந்து நிலையம் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த ரவீந்திரன், மெர்சியை வழிமறித்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவீந்திரன் மெர்சியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மெர்சி உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரவீந்திரனை பிடித்து தாக்கினர். பின்னர் அவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close