[X] Close

ஆஹா ஓஹோ... கொத்தவரங்காய் பருப்பு உசிலி!


paruppu-usili

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Aug, 2018 15:54 pm
  • அ+ அ-

கொத்தவரங்கா மாதிரி இருந்துக்கிட்டு என்னென்ன செய்றான் பாரு என்று யாரையேனும் கேலிக்குச் சொல்லுவார்கள். ஆனால் கொத்தவரங்காயைப் பயன்படுத்திச் செய்யும் பருப்பு உசிலியின் சுவைக்கு இணையே இல்லை என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?

பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் கொத்தவரங்காய், பருப்புடன் சேர்ந்து மிகப்பெரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுவிடுகிறது. பெரிய கட்சியுடன் சின்னக்கட்சி கூட்டணி வைத்து ஜெயித்துவிடுமே... அதுமாதிரிதான் இதுவும்!

சரி... கொத்தவரங்காய் பருப்பு உசிலி எப்படிச் செய்யணும் தெரியுமா?

தேவையானவை என்ன?

பொடிசாக நறுக்கிய கொத்தவரங்காய் - 2 கப், 
உப்பு - தேவையான அளவு.

நன்றாக அரைத்துக்கொள்வதற்கு...  
இவையெல்லாம் தேவை.


துவரம் பருப்பு - அரை அல்லது முக்கால் கப்,
கடலைப் பருப்பு - அரை அல்லது முக்கால் கப் 
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்கத் தேவை...

எண்ணெய் - 1 டீஸ்பூன் 
கடுகு- 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு -அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை- உள்ளங்கையில் பாதியளவு 
மஞ்சள் தூள்- சிறிதளவு 
பெருங்காயம்- சிறிதளவு

அப்புறம்... என்ன செய்யணும்?

கொத்தவரங்காயை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பொடிசுபொடிசாக நறுக்கி, போதுமான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வையுங்கள்.

அடுத்து துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 1 மணி நேரம் ஊற வைத்து, மிளகாயுடன் சேர்த்துக் நன்றாக, கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அரைத்த அந்த விழுதை ஆவியில் நன்றாக வேக வையுங்கள்.

பிறகு ஆறியதும் நன்றாக உதிர்த்து விடுங்கள். கடாய் அல்லது வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பதற்கான பொருட்களை ஒவ்வொன்றாக இப்போது அதில் சேருங்கள்.

பிறகு அரைத்த விழுதையும் சேருங்கள்.  பொன்னிறமாகும்வரை நன்றாக வதக்குங்கள்.  பிறகு வேக வைத்துள்ள  கொத்தவரங்காயையும் சேர்த்து கிளறிவிட்டு சுவைத்துப் பாருங்கள். தேவைப்பட்டால், துளி உப்பு சேர்க்கலாம்.

சாம்பார் சாதம், ரசம் சாதம், வத்தக்குழம்பு சாதங்களுக்கு கொத்தவரங்காய் பருப்பு உசிலி செம காம்பினேஷன்.

‘போனதடவை வந்திருந்தப்போ பருப்பு உசிலி பண்ணினீங்களே... அது எப்படிப்பண்ணனும்’ என்று போன் மேல் போட்டுக் கேட்பார்கள்.

சமையல் ரெசிப்பி தெரிந்துகொள்ள...

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close